நடந்தது ஒரே விதமான குற்றம் சுட்டது வெளிநாட்டினர் சுடப்பட்டது இந்திய நாட்டின் பிரஜைகள்.ஆனால்,நடுவண் அரசின்
ரியாக்சன் வேறு வேறாக இருக்கிறது.இத்தகையதொரு அதிசய நிகழ்வு நம் நாட்டில் மட்டுமே நடக்கும்.
கேரளக் கடற்கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித்,தமிழக எல்லையோரம் மீன் பிடிக்கும் மீனவர்களை மட்டும் ஒருமைப்பாட்டு தர்மம் சிறிதும் இன்றி,பிரதேச அடையாள மிட்டு தமிழக மீனவர்கள் என்று தனிமைப்படுத்துகிறார்.
''எச்சரிக்கை செய்தும் கப்பலருகே வந்தார்கள் எனவே கடற்கொள்ளையர்கள் என்று தவறாக சுட்டுவிட்டோம்''என்கிற இத்தாலி வீரர்களை வழக்கில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது.பாராளுமன்றம் வெகுண்டெழுகிறது.எதிர்க்கட்சிகள்
ஆர்ப்பரிக்கின்றன,இத்தாலிய தூதர் தாயகம் போவதற்கு விமான நிலையக் கதவுகள் மூடிக்கொள்கின்றன.சரி நல்ல விஷயம்தான்.இந்திய மீனவர்களுக்கான இத்தகைய கருணை வரவேற்கக்கூடியதுதான்.
ஆனால்,அதே இந்தியாவில் பிறந்து,தனது வாழ்வாதாரத்தின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள கடல் அன்னையைத் தவிர வேறு வழியில்லாத 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள வெறியர்களால் இதுவரைக்
கொல்லப்பட்டிருக்கும் போது எந்த வெளியுறவுத்துறை அமைச்சரும் வாயைத் திறக்கவில்லை.இதைப்பற்றி பேச பாராளுமன்றத்தில் யாருக்கும் நேரமுமில்லை.
துரதிஷ்டவசமாக,நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டின் நலன் இரண்டாம்பட்சமாகவே போய்விடுகிறது
என்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் துறைகளே சான்று.தனது மாநிலத்தின் மீனவர்கள் சுடப்பட்ட போது கொதித்தெழுந்த ஏ.கே.அந்தோணியைப் போன்ற மத்திய ராணுவ அமைச்சராகவோ,அதற்கு ஆதரவாய் செயல்படுகிற குர்ஷித் வகித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ நம் தமிழக அமைச்சர்கள் எவரும் இல்லை என்பது கூட(இதில் என்ன பெரிய வருமானம் வரப் போகிறது?) தமிழக மீனவர்களின் பிரச்சினை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படாமல் போனதற்குக் காரணம் என்று சொல்லலாம்.மந்திரிகளை விடுங்கள்.தமிழீழம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் மாணவர்களின் முனைப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட நமது முதல்நிலைத் தலைவர்களிடம் நாம் பார்க்கக் காணோம்.
கூடங்குளம் மின் உற்பத்தி ஒதுக்கீடு,வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வருகின்ற மின்தடம்,தமிழ்நாட்டை ஊடுருவிச் செல்லும் கெய்ல் நிறுவனத்தின் சமையல் எரிவாயு குழாய் பதிப்பு என எந்த தேசியத் திட்டத்திலும் தமிழ்நாட்டின் தேசியநலன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.கிழக்கிற்கு ஒரு நீதி,மேற்கிற்கு ஒரு நீதி என்று நடந்து கொள்ளும் அரசை எப்படி நடுவண் அரசு என்று அழைப்பது?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.இத்தனையும் நடந்தபிறகு தமிழகத்தின் நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகளில் வரும் தேர்தல்களில் வாக்குக்கோரி நடந்து வர காங்கிரசுக்கும் சரி,மற்ற தேசிய கட்சிகளுக்கும் துணிவிருக்காது.
E.உதயகுமார்
Friday, 29 March 2013
கிழக்கிற்கு ஒரு நீதி! மேற்கிற்கு ஒரு நீதி!-ஏப்ரல்-2013

Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
01:54
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment