
நுண்ணறிவு,நேர்மை, வீரம், அர்ப்பணிப்பு, சமயோசிதம், செயலாற்றும் திறன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவையெல்லாம் காவல் துறையினருக்கு அவசியம் தேவை எனச் சொன்ன அஷூஞர் அண்ணா சொல்லாமல் விடுத்த காவல்துறைக்குத் தேவையான இன்னொரு குணம் தாய்மை.
தாய்மைக்கும், கடமைக்கும் என்ன தொடர்பு என கேள்வி கேட்பவர்கள் கீழ்க்கண்ட மூன்று செய்திகளைப் பற்றி படித்தால் நிச்சயம் புரியும்.
செய்தி ஒன்று: சீனாவில் பூகம்ப பேரிடர் மீட்புப் பணிக்காக ஜியாங் என்ற ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பியிருந்தது அரசு. பிறந்து 6 மாதமே ஆன தனது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு பயணமானார் ஜியாங். குழந்தையை விட்டுவிட்டு வந்தாலும், அந்தப் பெண் போலீசின் தாய்மை மட்டும் மாறவில்லை. அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எட்டு குழந்தைகளுக்கும் தனது தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் ஜியாங். தாய்மை நிறைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரியை அனைவரும் ‘போலீஸ் அம்மா’ என்று அழைக்கிறார்களாம்.
செய்தி இரண்டு: இது நடந்தது சென்னையில். மனநிலை சரியில்லாத தனது 20 வயது பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வந்திருக்கிறார் ஒரு தாய். அங்கு ஓரிடத்தில் தனது பெண்ணை உட்கார வைத்துவிட்டு, மனு கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் மனநிலை சரியில்லாத அந்தப் பெண் தனக்கு அருகிலிருந்த பெண் போலீசை தாக்கி விட்டார். இந்த விவரம் தெரிந்து அந்த தாய் பெண் போலீசிடம்
மன்னிப்புக் கேட்டதற்கு, அந்தப் பெண் போலீஸ் ‘பரவாயில்லை விடுங்கள், அவர்கள் குழந்தை மாதிரிதானே’ எனப் பெருந்தன்மையோடு அந்தப் பெண் மீது இரக்கம் காட்டியிருக்கிறார்.
காக்கிச் சட்டைக்குள்ளும் இருக்கும் தாய்மை நிறைந்த இந்த இரு இதயங்களைப் பற்ஷூய செய்திகளைப் படித்தீர்கள் அல்லவா?
இனி, 3 வது செய்தி. இது நடந்தது தலைநகருக்கெல்லாம் தலைநகர் டெல்லியில். ஐந்து வயது பெண் குழந்தையை பலாத்காரப்படுத்திய
கொடூர குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய நிவாரணமும், நீதி வழங்கவும், ஆயிரக்கணக்கான பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களில் ஒரு பெண்ணை துணை கமிக்ஷனர் ஒருவர் கன்னத்தில் அறைந்து வெளியே செல்லும்படி துரத்தியிருக்கிறார். ஒரு குற்றமும் செய்யாத, ஒரு தவறும் செய்யாத, கைகளில் எவ்வித ஆயுதமுமின்றி , யாரோ ஒரு முகம் தெரியாத பெண் குழந்தைக்காக நீதி கேட்கச் சென்று முற்றுகையிட்ட ஒரு இளம் பெண்னை கன்னங்களில் மாறி மாறி அறைந்த அந்த உதவி கமிக்ஷனர் போன்ற இரக்கமற்றவர்களும் காவல்துறையில் உள்ளனர்.
காக்கிச்சட்டை என்பது தனது வலுவினையும், அதிகாரத்தையும், பொதுமக்கள் மீது பிரயோகிப்பதுதான் என நினைத்துக் கொள்ளும் பல ஆயிரம் போலீசார் நம் நாட்டில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சம் சீனப் பெண் போலீஸ் ஜியாங்கியிட மிருந்தோ அல்லது சென்னை பெண் போலீசிடமிருந்தோ தாய்மை கலந்த கடமையைக் கற்றுக் கொள்ளலாம்.
ஏனெனில், தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. சில சமயம் ஆண்களுக்கும் அது தேவையானதுதான்.
E.உதயகுமார்
நிர்வாக இயக்குனர்
0 comments:
Post a Comment