ஒரு நாட்டு மக்களை குறிப்பாக அடித்தட்டு மக்களை காப்பதற்கும்,அன்றாடம் ஏற்படும் துயரங்களை தீர்ப்பதற்கும் தான் மத்திய மாநில அரசுகள் இயங்குவதாக இந்த ஜனநாயக அமைப்பில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அப்படி இல்லையோ?என்ற ஐயங்களை சமீபகால நிகழ்வுகள் நமக்கு காட்டியவண்ணம் இருக்கின்றன.
நாட்டு மக்கள் அனைவருக்கும் படி அளந்தாலும்,தாங்கள் உய்வுறுவதற்கு எவ்வித படியும் இல்லாத விவசாய பெருமக்களுக்கு அண்மையில் ஏற்பட்டுவரும் துயரங்கள் ஏராளம் நகரங்களை மேம்படுத்தவும்,நகரங்களை இணைக்கவும்,அரசுகள் எடுக்கும் முயற்சிகளால் தெரிந்தோ தெரியாமலோ கிராமங்கள் நசுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள்,ஆறு வழிச்சாலைகளாக உருவாக்கப்பட்டாலும்,நெடுஞ்சாலை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும்,உயர் மின்னழுத கம்பிகள் அமைக்கப்பட்டாலும்,ரயில்வே ட்ராக்குகள் அகலபடுத்தப்பட்டாலும்,அல்லது புதிதாக உருவாக்கப்பட்டாலும்,முதலில் அத்திட்டங்களுக்கு தங்களது நிலத்தையும்,சொத்துக்களையும் பறிகொடுப்பது விவசாய பெருமக்களே!விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்கிறதோ இல்லையோ துயரங்களை தொடர்ந்து கொடுக்க அரசுகள் தவறுவதே இல்லை.
இப்போது கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயுவை திரவ வடிவில் குழாய்களின் மூலமாக எடுத்துச் செல்ல GAIL என்கிற அரசு பொதுத்துறை நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது,இந்தக் குழாய்கள் செல்லும் பாதை நமது தமிழகத்தில் 310 கி.மீ.வரை பயணிக்கிறது(கர்நாடகத்தில் 95 கி.மீ.மட்டுமே).வீடுகளுக்கு உருளைகளுக்குப் பதில் குழாய்கள் மூலம் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும் இந்த திட்டம் வரவேற்கக் கூடியதுதான்.
ஆனால்,இவை நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ,இரயில்வே ட்ராக்குகளின் ஓரமாகவோ,ஆறுகளின் ஓரமாகவோ கொண்டு செல்லப்படாமல்,அப்பாவி விவசாயப் பெருமக்களின் விவசாய நிலங்களுக்கு ஊடாக ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்?என்பது தான் நமது கேள்வி.
ஏற்கனவே.உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும்போது,உயரமான மரங்களை வளர்க்ககூடாது என்றார்கள்.இப்போது எரிவாயு குழாய்களை அமைக்கும் போது வேர்விடும் மரங்களை வளர்க்கக்கூடாது என்கின்றனர்.அது மட்டுமில்லாது,அந்த குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ,குழாய்களில் திரவக்கசிவு ஏற்பட்டாலோ நிலத்தின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாம்.எளிதில் தீ பற்றக்கூடிய ரசாயனம் தனது சொந்த நிலத்திற்கு அடியில் செல்வதை எந்த விவசாயிதான் விரும்புவார்?
நிலத்தின் கீழேயும் நெருப்பு(எரிவாயு),நிலத்தின் மேலேயும் நெருப்பு(உயர் அழுத்த மின் கம்பிகள்)தண்ணீரும் கிடைக்கவில்லை,உரம் வாங்கவும் காசில்லை என்று அடுக்கடுக்கான துயரங்களை விவசாயிகளுக்குக் கொடுப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.அதற்கு அரசு
'தேசிய நலன்'என்று பெயர் சூட்டினால்,அது ஜனநாயக போக்கிற்கு விரோதமானது.
பெண்களும்,விவசாயிகளும் அழுகிற தேசம் உருப்படாது என சாஸ்திரம் சொல்கிறது.
அது சரி.நாம் எப்போது சாஸ்திரங்களை மதித்தோம்?.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Sunday, 3 March 2013
விவசாயிகள் அழுகிற தேசமிது! மார்ச்-2013

Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
23:41
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment