ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக.
அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை
வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது.
தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும்.
போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற
ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை.
இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது?
காத்திருப்போம்!
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Wednesday, 20 February 2013
'லா'வை மீறும் சவுதாலாக்கள்! பிப்ரவரி-2013
ஒரே வீட்டில் தந்தையும்,மகனும் சிறைக்குச் செல்வது என்பது நமது பாரதத்திற்குப் புதிதல்ல.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அப்படித்தான் சிறைக்குச் சென்றார்கள்.அதையும் பெருமையாகக் கருதினார்கள்.அது இந்தியா சுதந்திரம் அடைவதற்கான போராட்டம்.ஆனால்,இன்றும் அப்படி சிறைக்குச் செல்ல துவங்கி இருக்கிறார்கள்.நாட்டு மக்களுக்காக அல்ல;வீட்டு மக்களுக்காக.
அரசியல்வாதிகள் ஊழல் செய்வதும்,அது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியாவதும்,பின்பு அதை மறந்துவிட்டு வேறு பரபரப்பான செய்திகளுக்குத் தாவுவதும் நமக்கு வாடிக்கையான ஒன்றாகும்.அந்த வரிசையில் இது ஒரு புதிய செய்தி.ஒரு மாஜி முதல்வரின் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு,தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாஜி முதல்வருக்கு தண்டனை
வழங்கப்பட்டிருப்பது என்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-வது ஆண்டில் தனக்கு வேண்டியவர்களையும்,லஞ்சம் வாங்கியவர்களையும் ஆசிரியர்களாக நியமனம் செய்ததாக இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும்,ஹரியானா மாநிலத்தின் அப்போதைய முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா மீது குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தண்டனை அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆயுள் தண்டனைக்கே அசராத நமது அரசியல்வாதிகளுக்கு,10 ஆண்டு கால சிறை என்பது பக்கத்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது போலாகும்.இது சவுதாலாவுக்கு மட்டுமல்ல,மக்களுக்கும் நன்கு தெரியும்.பெரும் பணம் செலவழித்து ஆட்சியை பிடிப்பது,ஆட்சிக்கு வந்தவுடன் பன்மடங்கு பணத்தை சுருட்டுவது போன்ற அரசியல்வாதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து குறைவான தண்டனை வழங்குவது என்பது நம் வீட்டுக் குழந்தையை மயிலிறகால் அடிப்பது போன்ற எண்ணத்தையே நமக்கு தருகிறது.
தாமதமாக வழங்கப்பட்டிருக்கின்ற மற்றும் குற்றத்தின் தன்மைக்கு குறைவாக வழங்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு என்ற போதிலும்,ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு,அதுவும் ஒரு முன்னாள் முதல்வருக்கு வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பதால் இதை கைதட்டி வரவேற்றுதான் ஆக வேண்டும்.
போலி நிதி நிறுவனங்கள்,மல்டி-லெவல் வியாபாரங்கள்.தேக்கு மர வளர்ப்பு,ஈமு கோழி வளர்ப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை சுருட்டும்'டை'கட்டிய கிரிமினல் பேர்வழிகளுக்கும்,சவுதாலா போன்ற
ஊழல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நாம் உணரவில்லை.
இந்த முறைகேடுகள் ஹரியானா மாநிலத்தில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் பரவியுள்ளது.மாஜிக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.ஓம் பிரகாஷ்,அஜய் சிங் சவுதாலாக்கள் போல 'லா'வை மீறும் சவுதாலாக்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு காலம் தாழ்த்தாது உடனே கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
தந்தை,மகன் இருவர் மட்டுமல்ல;இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்த்தால் நாடு முழுக்க நிறைய ஊழல் குடும்பங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.சவுதாலா குடும்பம் ஒரு தொடக்கமே.அதைத் தொடர்ந்து பல்வேறு ஊழல் குடும்பங்களின் சிறையை நோக்கிய அணிவகுப்பைப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது?
காத்திருப்போம்!
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:56
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இந்தியா ஆன்மீக பூமி அல்ல!-ஜனவரி-2013
உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினர் ஆச்சரியமுடன் பார்க்கும் பல விஷயங்களில் முதன்மையானது
நம் நாடு ஓர் 'ஆன்மீக பூமி'என்பது தான் ஆனால்,தற்போதைய காலகட்டத்தில் நம் நாடு மெல்ல மெல்ல 'ஆபாச பூமி' ஆகிக் கொண்டிருக்கிறதோ? என்கிற அச்சம் நம் எல்லோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது.
டெல்லியில் நடந்த மருத்துவக்கல்லூரி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தைத்தான் இந்த தலையங்கம் பீடிகையோடு சொல்ல முயல்கிறது என்று நினைக்க வேண்டாம்.தலைநகரில் நடைபெறும் சம்பவங்கள் மட்டுமே தலைப்புச் செய்தியாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
தலைப்புச் செய்தி ஆகாமல்,தவறிப்போய் பெட்டிச் செய்திகளில்,சுருக்கமாகச் சொல்லிவிட்டு
தொடராமல் போன எத்தனையோ கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கென நாம் ஆண்டுக்கணக்கில் ஏடுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டாம்,இதோ,
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டுமே செய்தி ஏடுகளில் வந்த தலைப்புச் செய்தி ஆகாமல்
போன செய்திகளில் சில-
-மகளை ஈவ்டீசிங் செய்த அகாலிதள கட்சிப் பிரமுகர் ராணவைத் தட்டிக்கேட்ட
தந்தை கொலை.இடம்:அமிர்தசரஸ் .(டிசம்பர் 6)
-பள்ளிக்குச் சென்ற 13வயது மாணவி புனிதா மர்ம நபர்களால் கற்பழித்துக் கொலை.
இடம்:தூத்துக்குடி,(டிசம்பர் -21)
-இளம் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கற்பழித்ததோடு,மரத்தில் கட்டி வைத்து
அடித்து சித்திரவதை.இடம்:திரிபுரா,(டிசம்பர்-23)
-4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைக் கற்பழித்து வெறியாட்டம்.இடம்:விருத்தாச்சலம்,(டிசம்பர் 24)
-7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன் கைது.இடம்:புதுக்கோட்டை(டிசம்பர்-24)
-9 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி,மர்ம நபர்கள் கற்பழிக்க முயற்சி.இடம்:உஜ்ஜெயினி(டிசம்பர்-23)
-பெண்களுக்கு எதிரான குற்றங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்.எல்.ஏக்கள்,2 எம்,பி.க்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.எந்நேரமும் கைதாகலாம்.(டிசம்பர்-21)
-உத்திர பிரதேசம் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 26 அமைச்சர்கள் கொலை,கற்பழிப்பு வழக்குகளில் சிக்கியவர்கள்.(டிசம்பர் 23)
இவையெல்லாம் உதாரண சம்பவங்கள்தான்.முழுவதையும் சொல்ல வேண்டுமெனில்,
முழு இதழும் தேவைப்படும்.
வாழ்க்கை முறையிலும்,நடை உடை பாவனையிலும் நமது நாகரீகம் மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.ஆனால்,நமது நடத்தை கற்காலத்தை நோக்கி அதாவது காட்டுமிராண்டித்தனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
கட்டுப்பாடில்லாத ஆபாச இணையதளங்கள்,சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் மது பானங்கள்,
விலை மலிவாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்,யாதொரு தணிக்கையுமின்றி வெளியிடப்படும்
ஆபாசத் திரைப்படங்கள்,சரியான வழிகாட்டுதலை செய்ய முயலாத பெற்றோர்கள்,குற்றங்களின்
வேர்களைக் கண்டறிந்து களையாத அரசுகள்.இவை எல்லாமும்தான் டெல்லி சம்பவமும்,
அதே போன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ காரணங்களாகின்றன.
எதிர்காலத்தில் இந்தியா வல்லரசு நாடாகும் என்று முழக்கமிடுகிறார் பிரதமர்.வல்லரசு வேண்டாம்.பெண்களை மதிக்கிற,பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற நல்லரசு நாடாக இருந்தாலே போதும்.
அதற்கு இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன.?
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:50
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பு -டிசம்பர்-2012
இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே நமது மக்களில் சிலருக்கு ஒரு பழக்கம் இருந்து வருகிறது.அதாவது,அத்தியாவசியப் பொருளை பதுக்குவது,தட்டுப்பாட்டை உருவாக்குவது,பின் விலையேற்றி விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது.பஞ்ச காலங்களில் அரிசி,கோதுமை,சர்க்கரை போன்ற பொருட்களை பதுக்குவதை தங்களது தொழிலாகவே செய்து வந்தோர் பலர்.
அவர்களது பதுக்க வேண்டிய பொருட்கள் லிஸ்டில் பால் பவுடர் கூட இடம் பெற்றிருந்தது என்பதுதான் கொடுமை.அதன் பிறகு மாநில அரசுகள் விழித்துக்கொண்டு சாட்டையைச் சுழற்றியதாலும்,வேளாண்மை மேம்பாடு காரணமாகவும் மெல்ல அதிலிருந்து விடுபட்டோம்.
ஆனால்,பதுகுவதற்கு வாய்ப்பே இல்லாத,அவசியமே இல்லாத மற்றுமொரு அத்தியாவசியப் பொருள்தான் ஆற்று மணல்.இயற்கை அன்னை வாரி வழங்கும் இலவசப் பொருளான ஆற்று மணலையும் பதுக்கி,தட்டுப் பாட்டை உருவாக்கி,அதிக விலைக்கு சிலர் விற்று விடுகிறார்கள்.அரசு நிர்ணயித்த விலையை விட பத்து மடங்கு விலையை அதிகமாக உயர்த்தி விற்பது,அந்த விலையை கொடுத்தாலும் கூட மணலை உடனடியாக கொடுக்காமல் தண்ணீர் காட்டுவது என கயமைத்தன்மை மிக்க செயல்களால் ஒரு லோடு மணலின் விற்பனை விலை ரூ.42,000-ஆக உயர்ந்தது.(27.11.12 அன்று நிலவரப்படி)இது கிட்டத்தட்ட இரண்டு சவரன் தங்க நகையின் விலைக்கு நிகரானது.மணலில் தங்கம் இருக்கிறதா?என்று தேடியதெல்லாம் ஒரு காலம்.மணல் விலை தங்கத்தை விட உயர்ந்திருப்பது இந்த காலம்.
அரசு,தானே விற்பனை செய்வது போல் அறிவிப்பினை வெளியிட்டு.மணல் அள்ளிப் போடும் ஆட்களை காண்ட்ராக்டர் ரூபத்தில் உள்ளூர் ஆட்களுக்கு'சிறப்பு அனுமதி தந்திருக்கிறது.தற்போதைய இந்த நிலைக்கு.
முன்பு இருந்த நிலையே மேல் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
ஆட்சியாளர்களிடம் சொல்லியும் பலன் இல்லை,ஆட்சியரிடம் சொல்லியும் பலனில்லை,ஊடகங்களில் புலம்பியும் பலனில்லை என்று தவிக்கிறார்கள் கட்டுமானத்துறையினர்.
இறுதியாக,வருகிற 12ஆம் தேதி போராட்டம் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம்.போராட்டம்,பேரணி போன்றவற்றை பெரிதாக நடத்திதான் இந்த அரசின் கவனத்தை கவரமுடியும் என்பதைத் தவிர வேறு என்னவழி நமக்கு?
நமது மக்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.எல்லா விலையேற்றதிற்கும் கண்டனம் தெரிவிப்பார்கள்,கொடி
பிடிப்பார்கள்,கூச்சல் போடுவார்கள்.பிறகு படிப்படியாக அந்த சுமைக்கு அடிபணிந்து விடுவார்கள்.அப்படித்தான் பெட்ரோல்,டீசல்,போக்குவரத்து,பால்,மின்சாரம்,சிமெண்ட்,கேஸ் சிலிண்டர் போன்ற பலவகை கட்டண உயர்வுகளையும் நாம் பழகிக் கொண்டு விட்டோம்.அந்த வரிசையில் மணலும் இடம் பெற்றுவிட்டால் அதைவிட கட்டுமானத்துறைக்கு ஆபத்து வேறேதும் இல்லை.
மேலே சொன்ன பொருட்களின் விலையேற்றத்தில் கூட ஏதோ ஒரு வகையில் உற்பத்திச் செலவு என்கிற காரணி ஒளிந்துள்ளது.(அதற்காக அந்த விலை உயர்வை நாம் நியாயப்படுத்தவில்லை).ஆனால்,உற்பத்திச்
செலவே இல்லாத,இயற்கை நமக்கு கொடுத்த ஆற்று மணலை சுரண்டி,அநியாய விலைக்கு விற்பது எவ்வகையிலும் நியாயமற்றதாகும்.
பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இந்த அநியாயக் கொள்ளையைத் தடுக்க நமது போராட்டம் வரை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க முன்வருவதுதான் தமிழக அரசின் தார்மீகப் பொறுப்பாக இருக்கும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:49
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
தடம் மாறும் ஊடகங்கள்-நவம்பர்-2012
நாட்டையும் நாட்டு மக்களையும் நெறிபடுத்த,அரசு இயந்திரங்களை நேர்படுத்த எல்லா ஜனநாயக நாடுகளிலும்,ஏன் சர்வதிகார நாடுகளிலும் கூட இருக்கிற ஒரே ஒரு வலிமையான ஆயுதம் ஊடகம் மட்டுமே.
உலகெங்கும் எத்தனையோ அநியாய அரசாங்கங்களை கவிழ்த்தும்,எண்ணிலடங்கா அக்கிரமங்களை
வெளிக் கொணர்ந்தும்,சமுதாயத்தோடு பின்னிப்பிணைந்தும் இயங்குகின்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லையெனில் இந்நாடு எப்போவோ பணக்கார முதலைகளுக்கு விலை பேசப்பட்டிருக்கும்.எத்தனை அராஜகங்கள் நடந்தாலும் மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை
பத்திரிகை,தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் தான்.
உண்மையில் எல்லா மாநிலங்களிலும் எதிர் கட்சிகளாக விளங்குவதும் இவைதான்,ஊடங்கங்களின் வழிகாட்டுதல்களிலும்,பாதுகாப்பிலும் தான் ஒரு நாட்டின் ஜனநாயகம் காக்கப்படுகிறது என்பது நிதர்சனம்.
ஆனால்,மேற்கூறிய எண்ணங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடகங்கள் தவிடுபொடியாக்கி வருகின்றன என்பதை சமீப கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தி பெருவாரியான மக்களிடமிருந்து பணம் பறிப்பது.மக்களை முட்டாளாக்கும் கோடிஸ்வர நிகழ்ச்சிகளை நடத்துவது.நிகழ்ச்சியில் பங்கேற்போர்களை சண்டையிட வைத்து அதன் மூலம் டி.ஆர்.பி ரேட்டினை ஏற்றுவது,நம்பகமற்ற விளம்பரங்களை ஒளிபரப்புவது அல்லது வெளியிடுவது இந்த வரிசையில் இன்னொன்றையும் சேர்த்துகொள்ளலாம்.
பிரபலமான தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை மிரட்டுவது.
இப்படி ஒரு மிரட்டலை செய்திருக்கிறது ஓர் ஊடகம்.அதன் பெயர் ஜீ.டிவி.வட இந்தியாவில் பிரபலமான அந்த சேனல் ரூ.100கோடி மதிப்பிலான விளம்பரம் கேட்டு இந்தியாவின் முக்கிய இரும்பு உருக்காலை நிறுவனமான ஜின்டால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.நவீன் ஜின்டாலை மிரட்டியிருக்கிறது.என்ற செய்தி நாடு முழுவதும் உள்ள ஊடகங்களின் மீதான் நம்பிக்கையை பெரிதும் அசைத்திருக்கிறது.
'ரூ.100கோடி விளம்பரத்தினை எங்கள் சேனலுக்கு தாருங்கள்!இன்றேல்,உங்கள் நிறுவனத்தைப் பற்றி தப்புத்
தப்பான செய்திகளை ஜீ.டிவியில் தொடர்ந்து ஒளிபரப்புவோம்' என்று நவீன் ஜின்டாலிடம் ஜி.டிவி நிறுவன அதிகாரிகள் பேரம் பேசியதை ஜின்டால் நிறுவன அதிகாரிகள் வீடியோ எடுத்து ஜீ.டிவியின் உண்மை சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
டிவி சேனலுக்கு மட்டுமல்ல,பத்திரிகைகளுக்கும் விளம்பரம் அவசியம் தான்.ஆனால்,விளம்பரத்தைப் பெறுவதற்காகவே இவற்றை நடத்தினால் விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக நடுநிலைமை தவறி நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஜின்டால் நிறுவனம் உண்மையில் தவறு செய்திருந்தாலும்,செய்தியை வெளியிடாமல் இருக்க ரூ.100கோடி பணம் கொடுங்கள் என மிரட்டுவது,சாலை வழிப்பறிக்கு சமமாகும்.உண்மையில் ஜீ.டிவி மட்டுமல்ல,ஏராளமான முன்னணி சேனல்களும்,
பத்திரிகைகளும் தற்போது இந்த வியாபாரத்தைத் தான் செய்து வருகின்றனர்.அதாவது உண்மையை அறிந்துகொள்வது,பின் அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்பது.
ஊழலை தட்டிக்கேட்பதற்குதான் ஊடகங்கள் என்கிற நிலைமை மாறி ஊழல்வாதிகளிடமே பணம் கேட்டு ஊடங்கங்கள் நிற்பது ஜனநாயக நாட்டிற்கு எந்த விதத்திலும் நன்மையை தராது.
நம்முடைய பேனா தலைகுனியும் போது தான், நாட்டின் ஜனநாயகம் தலைநிமிரும்.
ஆனால் நாமே தலைகுனிந்தால்?
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:42
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஊழல்வாதிகளின் பணம் காய்ச்சி மரம்-அக்டோபர்-2012
உலக மக்களில் மொத்தமே இருபிரிவுகள் தான்.ஒரு பிரிவு.அதிகாரம் செய்பவர்கள்.இன்னொரு பிரிவு அதிகாரத்திற்கு ஆட்படுபவர்கள்.'அதிகாரத்தைச் செலுத்துபவர்கள்'என்ற பிரிவில் நுழைந்து எளிய மக்களை ஆட்டிப் படைக்கும் சக்திகள் எல்லாக் காலகட்டங்களிலுமே இருந்து கொண்டே தான் வருகின்றனர்.மன்னராட்சி,அன்னியர் ஆட்சி,மன்னராட்சியை விட மோசமானதோ இந்தக் குடியாட்சி? என்று நம்மை எண்ணவும் செய்கிறது.அஜாக்கிரதையாலும்,முன் யோசனை இல்லாத திட்டங்களினாலும் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான வருமான இழப்புகளுக்கு அதிகாரத்திற்கு அடிபணியக்கூடிய எளிய
மக்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
அண்மையில்,மத்திய அரசால் விதிக்கப்பட்ட டீசல் விலைஉயர்வு,மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் குறைப்பு.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தல் முதலானவற்றுக்காக,எப்பொழுதுமே பேசாத பிரதமர் மன்மோகன் சிங்,தொலைகாட்சியில் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.விலை உயர்வுக்கும்,அன்னிய நேரடி முதலீட்டிற்கும் சப்பைக் கட்டு கட்டிய பிரதமர் மறந்தும் கூட,அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பான ஸ்பெக்ட்ரம் 2G ஊழல் ரூ.1.76,000 கோடி பற்றியோ,122 நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததினால் ஏற்பட்ட இழப்பு ரூ.1,86,000 கோடி பற்றியோ,வெடிக்கக் காத்திருக்கும் அடுத்த ஊழலான ரூபாய் ஆறு இலட்சம் கோடி மதிப்பிலான விண்வெளி ஸ்பெக்ட்ரம் பற்றியோ,
வாயைத் திறக்கவில்லை.இந்தப் பணமெல்லாம் ஒழுங்காக வசூலிக்கப்பட்டு,ஊழல்
அரசியல்வாதிகளின் முழு கருப்புப் பணத்தையும் வெளிக்கொணர்ந்தால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு.ரூ.10 ஆகவும்,வருடத்திற்கு 25 காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.பொருளாதார மேதையான பிரதமருக்கு இது தெரியாமலா இருக்கும்?
எளிய மக்களை நசுக்காமல் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டங்களும் இல்லாத,தனது கட்சியிலும்,கூட்டணிக் கட்சிகளிலும் உள்ள ஊழல் பேர்வழிகளைக் கட்டுப்படுத்த இயலாத நமது பிரதமர்,ஒரு புதிய விஷயத்தை நமக்கு சொல்ல முன்வந்திருக்கிறார்.பணம் மரத்தில் காய்ப்பதில்லையாம்.அதனால்,நாம் இந்த நெருக்கடியை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டுமாம்.
ஆனால்,உண்மை என்ன தெரியுமா?பணம் மரத்தில் தான் காய்க்கிறது.அந்த மரத்தின் பெயர் 'இந்தியா'.
அந்த மரத்தை விதைத்து,வளர்த்து,பராமரித்து வருவது,எந்தவித அதிகாரமும் இல்லாத எளிய இந்திய மக்கள் தான்.அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்த மரத்தில் காய்க்கும் பணத்தை அறுவடை செய்யும் வித்தை நன்றாகத் தெரிந்திருக்கிறது,அதை பதுக்கவும் தெரிந்திருக்கிறது.
வெகு நாட்களுக்கு முன் ஒரு தமிழகத் தலைவருக்கு பிரதமர் பதவி தேடி வந்தபோது அதை மறுத்து அவர் சொன்ன வார்த்தை:''நாட்டின் பிரதமர் என்பவர் வெறுமனே நாட்டின் அன்றாட நிர்வாகத்தை பார்த்துக் கொள்பவர் அல்லர்.பிரதமராக வருபவருக்கு ஆழ்ந்த பொருளாதார அறிவு,தொலைநோக்குப் பார்வை,உலகம் எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது?அதில் இந்தியாவை எப்படி வழி நடத்த வேண்டும்?போன்ற
சிந்தனைகள் வேண்டும்.என்னால் அது முடியாது.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பதவி வருகிறது என்றால் அதில் போய் நாம் ஒட்டிக் கொண்டுவிடுவதா?பதவியை விட தேசம் பெரிது அல்லவா?''இப்படி சொன்னவர் ஜி.கே.மூப்பனார்.ஆனால்,அதற்குப் பின் வந்த எந்தப் பிரதமருக்கும் மூப்பனாரின் தெளிவு இருந்ததாக நாம் அறியவில்லை.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கறுப்பு ஆகஸ்ட் -செப்டம்பர்-2012
வர வர நமது மக்கள் மோசமான கலாசாரத்திற்கும்,நடத்தைகளுக்கும் முன்னுதாரணமாக ஆகிக் கொண்டிருக்கிறார்களோ?என்ற ஐயம் வலுப் பெற்றுக் கொண்டே வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த சில சம்பவக் கோர்வைகளை படித்துப் பார்த்தால்,அது உங்களுக்கே புரியும்.
ஆதி திராவிடர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாடு.அவர்களும் பள்ளிக்கு வந்து தடையில்லாத கல்வியைப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கில் அரசினால் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அந்த எளிய மாணவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஏய்த்து கொள்ளையடித்திருக்கிறார்கள்! அருவெறுப்பான இவர்கள் தலைமையாசிரியர் பதவி வகித்தார்கள் என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.
நாட்டின் கிரானைட் போன்ற கனிம வளங்களை குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்து நாட்டின் உள் நாட்டுத்
தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,உபரி கனிமங்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.ஆனால் ஒரேயடியாக அரசையும்,மக்களையும் ஏமாற்றி,வரையறை மீறி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான அரசின் வருமானத்தை 177 கல்குவாரி நிறுவனங்கள்'ஸ்வாகா'செய்திருக்கின்றன.இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு என்பது வெளிப்படைச் செய்தி.
நாட்டின் இன்னொரு செல்வமான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு முறைகேடாக ஒதுக்கியதன் மூலம் ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட மத்திய அரசின் செயல்பாடுகளே காரணமாக இருந்திருக்கிறதாம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஓவர்டேக் செய்திருக்கிறது நிலக்கரி சுரங்க ஊழல்.பிரதமர் வழக்கம் போல மெளனமாக இருக்கிறார்.
நம் மாநிலத்திற்கு தேவையான பணியாளர்களைத் தகுதி தேர்வுகள் மூலம் நியமித்துக்கொள்ளும் அமைப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.இது நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது.இதனை வாங்குவதற்கு மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இன்டர்நெட் சென்டர்களையும்,லாட்ஜ்களையும் தேடி அலைந்திருக்கிறார்கள்.இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து
வினாத்தாளைப் பெற்றுள்ளார்கள்.நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் ஒட்டுமொத்த அரசுத் தேர்வு முறையைக் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது.
கடந்த ஆகஸ்டை கறுப்பு ஆகஸ்டாக மாற்றிய ஊழல் சம்பவங்கள் இவை.ஆகஸ்ட் 15 அன்று பிரதமர்
கொடியேற்றியதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயமும் சென்ற மாதத்தில் நடக்கவில்லை என்பது நம்மை உறைய வைக்கும் செய்தி! முதல் மூன்று விஷயங்கள் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் தொடர்புடையது.ஆனால்,வினாத்தாள் விவகாரத்தில் ஊழல் செய்தது,
வேலை தேடும் இளைஞர்கள்.அதாவது மக்கள்.
ஊழல் அரசியல்வாதிகள்,நேர்மையற்ற அரசு அதிகாரிகள் தன்னொழுக்கம் இல்லாத தறிகெட்ட மக்கள்,இதுதான் இந்தியாவின் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது.தாங்கள் வாழும் தேசத்தை பாழ்படுத்த நினைக்கும் மனித கூட்டம் பல்கிப் பெருகி வருவது கவலைக்குரியது.
''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று பாரதி என்னமோ பெருமையாகப் பாடியிருக்கலாம்.இதை காக்கை குருவிகள் தற்போது கேட்க நேர்ந்தால்,''நாங்களா உங்கள் ஜாதி?'' என நம்மை காறித்துப்பக் கூடும்.
ஏனெனில்,எந்த காக்கைக் குருவியும் ஆதிதிராவிட ஏழைக்குழந்தைகளின்
கல்வித் தொகையைக் கவர நினைப்பதில்லை.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கேட்கவிரும்பும் ஒரே கேள்வி!-ஆகஸ்ட்-2012
1962.தமிழ்நாட்டில் பிறந்த எந்தக் குழைந்தைக்கும் 'அ' ன்னா,'ஆ' வன்னா தெரியாமல் போய்விடக் கூடாது என்று பதைபதைத்த காமராஜரின் ஆட்சிகாலம் அது.
அரசு செய்தித் தொடர்புத்துறை அதிகாரிகள் காமராஜரைப் பார்க்க வந்தார்கள்.
''ஐயா,இதுவரை நமது ஆட்சியில் செய்து வந்த சாதனைகளை பொது இடங்களிலும்,
திரை அரங்குகளிலும்,ஒளிபரப்பச் செய்யலாம்.இதன் மூலம் அரசிற்கு நற்பெயர் கிடைக்கும்'' என்றார்கள்.
காமராஜர் எவ்வளவோ மறுத்தும் அதிகாரிகள் அவரை சம்மதிக்க வைத்தார்கள்.கடைசியில் காமராஜர், ''அதற்கு எத்தனை செலவாகும்?'' என்றார்.அதிகாரிகள் தொகையைச் சொன்னார்கள்.
தொகையைக் கேட்டதும் காமராஜர்.''அட எழுந்து போங்கய்யா! அத்தனை காசு எங்கிட்ட இருந்தா நாலு பள்ளிக்கூடத்தைக் கட்டுவேன்'' என்றார்.
தனது சிந்தை,நாடி,நரம்பு,இரத்தம் அனைத்திலும் சேவை என்ற அந்த ஒற்றை வார்த்தை தவிர,வேறு அறியாத அவர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஏனோ உருவாகவில்லை.கல்வித்தந்தை என நாம் அழைக்கும் அவரது படம் எல்லா அரசு அலுவலகங்களிலும் உண்டு.
ஆனால் அரசின் எந்த செயல்பாடுகளிலும் காமராஜரின் வாசமில்லை.
அண்மையில் தாம்பரத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி,பள்ளியின் பேருந்தில் வீட்டிற்கு
திரும்பும்போது,பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து,அதே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாள்.சிறுமி இறந்ததைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரை நையப்புடைத்ததுடன் பேருந்தையும் எரித்திருக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட சியோன் பள்ளி முதல்வரைக் கேட்டபோது 'இது எங்களுக்கு சொந்தமான பேருந்தே அல்ல'
என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.தாம்பரம் ஆர்.டி.ஓ.அலுவலரைக் கேட்டால்,'பஸ்ஸில் ஓட்டை இருந்தது என்று யார் சொன்னது?ஓட்டை இருந்தால் நாங்கள் சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோமே! என்கிறார்.அப்படியெனில்,எஃப்.சி.பெற்ற ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய
ஓட்டை திடீரென விழுந்துவிட்டதா? என நமக்குத் தெரியவில்லை.இந்த ஆர்.டி.ஓ.அலுவலரையும்,பள்ளி தாளாளரையும் கூப்பிட்டு வெளுத்து வாங்குவதற்கு பள்ளிக்குழந்தைகளின்பாற் உயிரையே வைத்திருந்த காமராஜர் போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.
இலாப நோக்கு இல்லாத,சேவை மனப்பான்மையோடு செய்யக்கூடிய தொழில்களை அரசு முன்னுரிமை
எடுத்துக் கொண்டு நடத்துவதுதான் அனைத்து நாடுகளிலும் மரபு.ஆனால்,நம் நாட்டில் சாராயத்தைக் காய்ச்சி
விற்கும் தொழிலை அரசு ஏற்றுக் கொண்டது. வருங்கால சந்ததியினரை உருவாக்க,நம் நாட்டில் இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பான கல்விக் கூடங்கள் தனியார் வசம் வந்துவிட்டது.
அதன் விளைவுகளின் ஒரு சிறுதுளி தான் இந்த சிறுமியின் மரணம்.
நாம் இங்கு யாரையும் தனித்தனியாக பல்வேறு கேள்விக் கணைகளை தொடுக்கப் போவதில்லை.
ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறோம்.
ஒரு குழந்தை விழக்கூடிய அளவிற்கு ஓட்டை இருந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநரையும்,
பேருந்துக் கட்டணம் என்று ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை வாங்கி வைத்துக் கொண்டதோடு
அந்தப் பேருந்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று,தப்பித்துக்கொள்ள நினைக்கும் அந்த பள்ளி முதல்வரையும்,தனது பேருந்து எந்த நிலையில் இருக்கிறது என்பதைக்கூட அறியாத முதலாளியையும்,நாங்கள் எஃப்.சி வழங்கும் போது அந்த ஓட்டை இல்லை என(பேருந்து எரிந்துவிட்டதால் ஓட்டை தெரியவா போகிறது?)சொல்லும் தாம்பரம் ஆர்.டி.ஓ .அலுவலரையும்,நாம் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
''இறந்து போன அந்தக் குட்டி தேவதை ஸ்ருதி ஒருவேளை உங்கள் குழந்தையாக இருந்தால் நீங்கள் இந்த பதில் தான் சொல்வீர்களா?''
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:41
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நாமாவது வெட்கப்படுவோம்-ஜூலை-2012
நாட்டில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளாக இராணுவத்துறை,நீதித்துறை மற்றும் உள்துறை ஆகிய பதவிகளைக்குறிப்பிடலாம்.(இதுவரை சிறந்த தலைவர்கள் அந்த பதவிகளில் உட்காரவில்லை என்பது வேறு விஷயம்)இவற்றுள் உள்துறையின் பங்கு முக்கியமானது.நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான வெளியுறவும்,எல்லைக் காவலும் எத்தனை முக்கியமோ,அத்தனை முக்கியம் உள்துறைக்கும் உண்டு.உள்துறை அமைச்சராக இருப்பது வெறும் உயர்ந்த பதவி மட்டுமல்ல ,ஒரு உன்னதமான பொறுப்பும் கூட.நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணி.
அந்தப் பணிக்கு புத்திக்கூர்மை,உடனடிச் செயல்வேகம்,பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளைப் பற்றிய அறிவு.மக்களின் வாழ்வு நிலை,கலாச்சாரம்,மதப்பிரிவினை ஆகியவற்றைப் பற்றிய தேர்ந்த ஞானம்,நமது உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வெளிநாடுகளின் சக்தியை கண்டறியும் திறன்,இவையெல்லாவற்றையும் விட 100 சதவீத நேர்மை ஆகியன அவசியம் இருக்க வேண்டும்.
நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இதெல்லாம் இருக்கிறதா?என்று ஆராய்வது நமது தலையங்கத்தின் நோக்கமல்ல.
குறைந்தபட்சம் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தினை பற்றிய விமர்சனங்களும்,ஐயங்களும் எழும் போது,அவற்றை நேர்கொள்வது தான் உள்துறை அமைச்சரின் குறைந்தபட்ச நேர்மையாக இருக்கமுடியும்.தாம் தில்லுமுல்லு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை எதிர்கொள்ள அச்சப்பட்டு,பலமுறை காலம் தாழ்த்தி,இறுதியாக இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று,ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார்,ஆனால் உயர்நீதிமன்றம்,அவருடைய மனுவை தள்ளுபடி செய்து,'வழக்கை சந்தித்தே தீரவேண்டும்' என்று உத்தரவிட்டிருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மோசடி,ஏர்செல் மாக்ஸிஸ் ஒப்பந்த ஊழல்,இவற்றுடன் இப்போது தேர்தல் தில்லுமுல்லு என வரிசையாக குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரம் மீது இருந்தும் பிரதமர் மௌனமாகத்தான் இருக்கிறார்.ப.சிதம்பரமோ,'15வது லோக்சபாவில் உள்ள உறுப்பினர்கள் மீது இதுபோன்று 111 தேர்தல் வழக்குகள் உள்ளன.இந்நிலையில் நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும்?''
என்று நம்மை திருப்பி கேள்வி கேட்கிறார்.யார் என்ன சொன்னாலும் சரி,தான் ஜெயித்தாலும் தோற்றாலும் சரி,பதவியில் ஒட்டிக்கொள்ள முயலுவதே தனது முதல் பணியாக எண்ணுபவர்தாம் நமது உள்துறை அமைச்சர்.
அமெரிக்காவில் கடந்த மாதம் 16ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒபாமா அமைச்சரவையின் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த ஜான் பிரைசன் என்பவர் காரை ஓட்டிச் செல்லும் போது அருகில் இருந்த காரின் மீது இடித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.மறுநாளே பத்திரிகைகளில், 'காரை இடித்துவிட்டு
நாகரீகத்திற்காகக் கூட மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார் மந்திரி' என்று செய்திகள் வெளியாயின.
நம்ம ஊர் மந்தியாக இருந்திருந்தால்,பேப்பரை தூக்கிப் போட்டுவிட்டு சிரித்துக் கொண்டே போயிருப்பார்.
அமெரிக்க மந்திரியாயிற்றே,அடுத்த நாளே அவமானம் தாங்காமல் இராஜினாமா செய்துவிட்டார்.
நமது நாகரீகமும்,அரசியலும் உச்சாணிக் கொம்பில் கொடிகட்டிப் பறந்தபோது மனிதர்களே இல்லாத
நிலப் பகுதிதான் அமெரிக்கா.ஆனால்,இப்பொழுது அவர்களது அரசியலையும்,நாகரீகத்தையும் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டி இருக்கிறது.
அதற்கு காரணம் நமது தலைவர்கள்.
E.உதயகுமார்,நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:40
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மாட்டு வண்டிக்காரனும் மத்திய அரசும்!ஜூன்-2012
பொதியேற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் அடிக்கடி செய்யும் காரியம் ஒன்று இருக்கிறது.அது,மாட்டின் கண்களில் படும்படி பத்து மூட்டைகளை வண்டியில் ஏற்றுவார்கள்.பிறகு,மாடு வண்டி இழுக்க முரண்டு பிடிக்கும் போது இரண்டு மூட்டைகளை இறக்கிவிடுவார்கள்.மாடும் பாரம் குறைந்ததென்று உற்சாகமாக வண்டியிழுக்கும்(உண்மையில் அவர்கள் ஏற்ற வேண்டியது எட்டு மூட்டைகள் தான் மீதி இரண்டும் டம்மி)
நாட்டின் பொருளாதார சூழலின் அடிப்படைக் காரணியாக விளங்கும் பெட்ரோலை,லிட்டருக்கு 7.54 ரூபாய் ஏற்றிவிட்டு 2.50 ரூபாய் குறைக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.(இந்த இதழை நீங்கள்
படிக்கும் போது அநேகமாக இரண்டு மூட்டை இறங்கியிருக்கலாம் .ஸாரி,இரண்டு ரூபாய் குறைந்திருக்கலாம்).ஒரு மாட்டுவண்டிக்காரனின் சாமர்த்தியத்தோடு செயல்பட்டு வரும் மத்திய அரசை எத்தனை பாராட்டினாலும் தகும்.
ஒரு முறை இரு முறை அல்ல.மன்மோகன்சிங் அரசு ஆட்சிக்கு வந்து பதினோராவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருகிறது.தினமும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக மத்திய அரசு வழக்கமான பாட்டையே பாடி வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது?நிச்சயம் அதற்க்கு வாய்ப்பில்லை.
கச்சா எண்ணெயின் தற்போதைய விலை பீப்பாய் ஒன்றுக்கு (160 லிட்டர்)105 அமெரிக்க டாலர்கள்.அதாவது ரூ.5,775.ஆக,ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ.36.09 தான்.இவற்றோடு சுத்திகரிப்பு செலவு ரூ.0.52,மூலதனச் செலவு ரூ.6.00,போக்குவரத்துச் செலவு ரூ.6.00,முகவர் கழிவு ரூ.1.05 என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட,ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.49.66 தான் ஆகிறது.
இந்த லட்சணத்தில்,பெட்ரோலுக்கு மானியம் தருகிறோம் என்று மாய்ந்து,மாய்ந்து பேசுகிறார்கள்.மானியம்
கிடக்கட்டும்,அரசு கூடுதல் வரிகள் போடாமல் இருந்தால் போதாதா?மத்திய அரசு சுங்க வரி,உற்பத்தி வரி என்று ஒரு புறமும்,மாநில அரசு விற்பனை வரி,மதிப்பு கூட்டு வரி என்று இன்னொருபுறமும் போட்டுத் தாக்க,
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.53க்கு வந்து நிற்கிறது.இப்படி ஒரு கடுமையான விலை உயர்வை
இந்திய மக்கள் கேள்விப்பட்டதில்லை.மறுநாள் முதல் விலை உயர்வு என கேள்விப்பட்டதும்,முதல்நாளே நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நின்று.முடிந்த வரையில் வாகனங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொள்வதுதான் நமது அதிகபட்ச சாமர்த்தியம்.
ஒரு பெரிய கோட்டின் அருகே.இன்னொரு பெரிய கோட்டைக் கிழித்து முந்தைய கோட்டை சிறியதாகக் காட்டுவது போல,இந்த விலை உயர்வை விட இன்னும் கடுமையான விலை உயர்வு வரும்.ஒரு லிட்டருக்கு ரூ.25,ரூ.30 என்று விலை ஏற்றி,சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு,ரூ.2 குறைக்கக் கூடும்.அப்போது நாம் அமைதியாகவே இருப்போம்.முடிந்தவரை அன்று மட்டும் டேங்கை நிரப்பிக்கொள்வோம்.
நாம் மாடுகளாக இருக்கும் வரை மத்திய அரசு மாட்டு வண்டிக்காரனாகத்தான் இருக்கும்.மாற்றமிருக்காது.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:40
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மனது வைக்குமா மத்திய அரசு?மே-2012
கிபி.1246,வெள்ளையர்களும் அவர்கள் சார்ந்த விஷயங்களும் இந்திய மண்ணில் கால் பதிக்காத காலகட்டம் அது.சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய சிறு இராஜ்ஜியம் ஒன்றிற்கு மன்னனாக இருந்தவன் சோழ வம்சத்தின் விளிம்பில் இருந்த மூன்றாம் இராஜராஜன்.செல்வச்செழிப்பில் நடுத்தரமாக இருந்த அவனது இராஜ்ஜியத்தின் மீது மாறவர்மன் சுந்தரபாண்டியன் போர் தொடுத்த போது,அவனிடம் சரண்டராகி,மாதம் தோறும் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான் இராஜராஜன்.இரு ஆண்டுகள் கழிந்த பிறகு கடுமையான பஞ்சத்தில் அகப்பட்டது இராஜராஜனின் தேசம்.மழையின்றி தானியக்கிடங்கில் சேமிப்புகள் இல்லை,கால்நடைகளும் மடிந்து போயின.அந்த சூழ்நிலையிலும் தான் செலுத்த வேண்டிய கப்பத்தொகையை சேனாதிபதி மூலம் கொடுத்தனுப்பினான் இராஜராஜன்.
கப்பத் தொகை கொடுத்த வேகத்தில் திரும்பி வந்தது.கூடவே இரண்டாயிரம் கால்நடைகளும்,100 பெரிய கலன்கலில் தானியங்களும்,40க்கும் மேற்பட்ட பார வண்டிகளில் ஆடைகளும் அணிவகுத்து நின்றன.
சேனாதிபதி கையில் சுந்தரபாண்டியன் கொடுத்தனுப்பிய ஓலை.அதில் சுந்தரபாண்டியன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தான்.'அன்பு இராஜராஜா! தங்களது தேசம் பசி,பிணி,பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் இந்த சூழலிலும் தவறாது கப்பம் செலுத்திய உங்கள் நேர்மை கண்டு வியந்தேன்.இருப்பினும்,எரியும் வீட்டில் பிடுங்குவதா தர்மம்? உங்களது நாட்டின் சூழ்நிலை சீராகி விட்ட பிறகு,கப்பம் தந்தால் போதும்.நான் அனுப்பியிருக்கும் கால்நடைகளையும்,தானியங்களையும்,தயைக் கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்'என்று எழுதியிருந்தான் சுந்தரபாண்டியன்.
தன்னிடம் கப்பம் கட்டும் சிறு அரசனாக இருந்தாலும் கூட,அவனது தேசத்தின்பாற்,குடிமக்களின் பாற் நேசம்
கொண்டிருந்த சுந்தரபாண்டியனை படித்ததும்,எவ்வளவு முயன்றும் நம்மால் மத்திய அரசினையும்,மாநில அரசினையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் ஒரு மாநிலத்தில் இல்லை என்றால் அந்த மாநிலத்தை மத்திய அரசு ஆதரிப்பதில்லை என்பது தொன்றுதொட்டு வரும் மரபு.வேண்டிய அளவு நிதி தராமல் இருப்பதும்,இயற்கை பேரிடர்களுக்கு உதவாமல் இருப்பதும்,புதிய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும் ஆகிய இச்செயல்கள் மூலம் ஒரு மாநிலத்தின் குடிமக்களுக்கு மத்திய அரசு ஏன் நேசத்தை காட்ட முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது,
இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தியை தொடங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு
மீண்டும் மீண்டும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்,மத்திய அரசிடம்
இருந்து பதில்தான் வரவில்லை.நமது மாநிலத்தில்,நமது இடத்தில்,அணுஉலை அச்சங்களுக்கு இடையே கிடைக்கின்ற மின்சாரம் தமிழக மக்களுக்குச் சொந்தமில்லை என்பது அநீதியாகும்.கூடங்குளம் மின்சாரத்தை தமிழக மக்களுக்கே பெற்றுத்தரும் முயற்சியில் தன்னந்தனியாக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார்.அவருடன் சேர்ந்து குரல் கொடுப்பது நமது கடமையாகும்.
ஒரு வேளை அதற்கும் செவிசாய்க்கவில்லை எனில்,போரிட்ட பகைவனிடம் நேசம் காட்டிய
சுந்தரபாண்டியனின் கதையை யாரவது மொழி பெயர்த்து பிரதமரிடம் தெரிவித்தால் ஒருவேளை மனது வைக்கலாம் மத்திய அரசு.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:39
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பாராட்டுக்கு உரியதா பட்ஜெட் ?-ஏப்ரல்-2012
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் என்னென்ன பொருட்களின் விலை ஏறுமோ?என்று கையைப்பிசைந்துக் கொண்டிருந்த மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார்கள்.வழக்கம் போல கார்கள் மற்றும் ஆடம்பரச் சாதனங்களின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.அதே சமயம் பூட்டுகள்,தீப்பெட்டிகள்,பால் புட்டிகளின் விலைகள் குறைத்துவிட்டோம்(!) என்று கடுப்பேற்றி இருக்கிறார்கள்.
எலெக்ட்ரிக் பைக்குகளின் விலையும் குறையப் போகிறதாம்.( தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் பைக் எத்தனை பேர்(!)
வைத்திருக்கிறார்கள்)விலை குறையவேண்டியது இவை மட்டும் தான் என நினைத்து விட்டார்கள் போலும்.
தமிழக மக்களின் வாழ்க்கை நிலையை சமநிலைப்படுத்தும் அறிவியல் பூர்வமான பட்ஜெட்டை எதிர்பார்த்து இருந்த நமக்கு,இலவசங்களுக்காக மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி நிதி
ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டதுமே 'புஸ்'என்று ஆகிவிட்டது.
தேர்தல் அறிக்கை புத்தகம் போன்று,பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வது
நமது மாநிலத்தில் மட்டும்தான் போலும்.
என்றாலும்,எந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இல்லாத அளவிற்கு இம்முறை நமது கட்டுமானத்துறை பக்கம் கருணை காட்டியிருக்கிறார்கள்.குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகளுக்கு தளப்பரப்புக் குறியீடு (FSI) கூடுதல் கட்டணமின்றி அதிகரிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நிச்சயம் வீடுகளின் விலையை 10% முதல் 20% வரை குறைக்க வழி செய்யும்.மேலும்,வீட்டு வசதி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட அளவு வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது.
அடுத்ததாக,புதிய வழிகாட்டு மதிப்பீடுகள் அமலுக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்கள்.அதே சமயம்,முத்திரை தாள் கட்டணத்தை 6% லிருந்து 5% ஆக குறைத்திருக்கிறார்கள் மற்றபடி,
பொதுப்பணித்துறைக்கும்,நெடுஞ்சாலைத்துறைக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து
அசத்தியிருக்கிறார்கள்.இவற்றைப் பாராட்ட 'பில்டர்ஸ் லைன்' கடமைப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பட்ஜெட் அறிக்கைக்கு நிகராக மக்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம்
'தொலைநோக்குத்திட்டம்-2023' என்பதுதான்.அடுத்த 10 ஆண்டுகளில்,தமிழக மக்கள் கல்வி,மருத்துவம்,வேலைவாய்ப்பு,குடிநீர்,தொழில்,வேளாண்மை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும்
ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெற இது வழி வகுக்கும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில்'குடிசைகளே இருக்காது','கல்வித்தரம் உயரும்','சாலை போக்குவரத்து
சர்வதேசதரத்திற்கு மேம்படும்','தமிழகத்தின் முக்கிய 10 நகரங்கள் உலகத்தரத்திற்கு இணையான வசதிகளை பெறும்' என்றெல்லாம் அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால்,எத்தனையோ,கவர்ச்சிகரமான திட்டங்களை கேட்டு ஏமாந்து போன தமிழக மக்களை,இன்னமும்
காத்திருக்கச்செய்யாமல்'தொலைநோக்குத் திட்டம் -2023'-ஐ நடைமுறைப் படுத்துவதற்கான
ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.திட்டப்பணிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை வெளிப்படையாக்க வேண்டும்.
இல்லையெனில்,இது மக்களுக்கான திட்டம் அல்ல.2023 வரை தனது கட்சி ஆட்சியை நிலைநிறுத்தச் செய்வதற்கான வழிமுறைத் திட்டம் என மக்கள் நினைத்து விடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:39
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கொள்ளையர்களின் சொகுசு வாசஸ்தலம்-மார்ச்-2012
தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு,சட்ட மன்றத்தில் பேசியபோது அவர்கள் சொன்ன வார்த்தைகள் அநேகமாக பலருக்கும் நினைவிருக்கலாம்.'நான் முதல்வராக பொறுப்பேற்கிறேன் என்று தெரிந்த பிறகு இங்குள்ள திருடர்கள்,கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டனர்' (ஆந்திரா மீது அப்படி என்ன கோபமோ!) என்று பெருமையாக கூறினார்.ஆனால்,உண்மையில் நடந்தது வேறு.எல்லா மாநில திருடர்களும்,கொள்ளையர்களும் வழி விசாரித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
திருப்பூர்,மதுரை,உடுமலைப்பேட்டை,சென்னை என கொள்ளையர்களின் பரப்பு விரிந்து கொண்டே போக,நிலக்கொள்ளை,கல்விக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளைகளுக்கு ஆட்பட்டு போயிருந்த தமிழக மக்களுக்கோ இந்த நேரடிக் கொள்ளை இன்னும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
கடந்த 10 மாதங்களாக அட்டகாசம் செய்து கொண்டிருந்த கொள்ளையர்களில் வெகு சிலரே பிடிபட்டு இருக்கிறார்கள் என்பதும்,வெகு சில உடமைகள் மட்டுமே மீட்கப்பட்டு இருப்பதும் வருந்தத்தக்க செய்தி.
சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டினை வாடகை எடுத்து தங்கி,தினசரி வேலைக்கு செல்வதைப்போல வேளச்சேரிக்கு அருகே இருக்கும் பெருங்குடியிலும்,கீழ்கட்டளையிலும் கொள்ளையடித்துவிட்டு,
வீட்டிற்குள் வந்து சாவகாசமாக படுத்துக்கொள்கிறார்கள் என்கிற அளவிற்கு கொள்ளையர்களின் சொகுசு
வாசஸ்தலம் ஆகிவிட்டது தமிழ்நாடு.(குற்றம் நடந்த இடத்திலிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் சுற்றிக்கொண்டிருந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு
ஒரு மாதம் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம்)
ஆனால்,இந்த வரிசையான கொள்ளைகளுக்கு அரசின் அஜாக்கிரதை
மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது.
யார் வாடகைக்கு குடி வந்தால் என்ன?அவர் என்ன பணி செய்தால் நமக்கு என்ன?என்கிற எண்ணம் பொதுவாக வீட்டு உரிமையாளர்களுக்கு உள்ளது.
அதாவது காலம் காலமாக அதே தெருவில் குடியிருக்கும் நபர் ரூ.5000 வாடகைக்கு கேட்கிறார் என்றால்,அவரை விடுத்து ரூ.10,000 வாடகை தருவதாக சொல்லும் முன்பின் தெரியாத,பீகார் போன்ற வட
மாநிலக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதுதான் அதிக வாடகை கேட்கும்
வீட்டு உரிமையாளர்களின் விருப்பமாகும்.
வங்கிகளுக்காகவும்,நகைக் கடைகள் போன்ற வணிக வளாகங்களுக்காகவும் கட்டிடங்கள் அமைக்கப்படும் போது,அதற்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கட்டித்தர கட்டுநர்கள்,காண்ட்ராக்டர்கள் முன்வர வேண்டும்.இதற்கென ஆகும் கூடுதல் செலவை வாடகைதாரர்கள் அல்லது கட்டிட உரிமையாளரிடமிருந்து கட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மூன்றாவதாக,பொதுமக்கள் ஆகிய நம்மை விட எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் முழு நேரக் கண்காணிப்பாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.நாம்தான்,நம் அருகே நிலவும் குற்றங்கள் பற்றியும்,குற்றம் ஏற்படக்கூடிய சூழல் குறித்தும்,ஐயத்திற்கு இடமானவர்கள் பற்றியும் உரிய இடத்தில் தகவல் தர முன்வர வேண்டும்.
இந்த மூன்றும் ஒருங்கிணைந்து அமைந்தால் தான் எங்கோ நடந்த குற்றங்கள் நம் ஜன்னல்களுக்கு அருகே கூட நடக்கக் கூடும் என்கிற அபாயத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:38
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அபாயகரமான அரசு கட்டிடங்கள்-பிப்ரவரி-2012
கடந்த ஜனவரி -15ம் தேதி பொங்கல் திருநாளன்று நள்ளிரவு நேரம் சென்னை எழிலகக் கட்டிடத்தில் தீ விபத்து
ஏற்பட்டது என்கிற செய்தி அரசுத்துறை அதிகாரிகள்,ஊழியர்களுக்கு மட்டுமன்றி,பாரம்பரியமிக்க நினைவுச்சின்னங்களை விரும்பும் அனைவருக்கும் வருத்தமான செய்திதான்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை வெறுமனே கிடங்குகளாகவும்,முட்புதர்களாகவும் வைத்துக்கொள்ள நம்மால்
மட்டுமே முடியும்.ரோம் நகரில் இன்றளவும் உள்ள கட்டிடங்களில்,ஏறத்தாழ 60 சதவிகிதத்திற்கு மேலான கட்டிடங்கள் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவைதான்.ஆனால்,அவற்றை தங்கள் அடையாளமாகவும்,தங்கள் கலாச்சாரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பேணி பாதுகாத்து வருகின்றார்கள்.நமக்குத்தான் இத்தனை அலட்சியம்.
பாரம்பரியமிக்க கட்டிடங்களை விடுங்கள்.சாதாரணமாக அரசுக்கட்டிடங்களில் ஒருசிலவற்றை தவிர,பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பின்றி,தகுந்த பாதுகாப்பின்றி,தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி,அபாயகரமான கட்டிடங்களாக இருப்பதை நாம் கண்கூடாக காணமுடியும்.
மிகவும் முக்கியமான ஆவணங்கள் எழிலகக் கட்டிட தீவிபத்தில் எரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சரிதான்.எல்லா ஆவணங்களையும்,மேஜையின் மீதும்,வரவேற்பறையிலும் வைத்திருந்தார்கள் போல.
வருகை பதிவேடுகள்,சம்பள விவரங்கள்,பணி விவரங்கள்,ஊழியர் நடத்தைக் குறிப்புகள் உள்ளிட்ட எந்த
பதிவேடுகளுமே கிடைக்கவில்லை என சாதரணமாகச் சொல்கிறார்கள்.முக்கியமான ஆவணங்களுக்கு
இன்னமும் மர பீரோதான் பாதுகாப்பானது என்று கருதும் அதிகாரிகளுக்கு எரிந்து போனது என்னென்ன?
எத்தனை கோடி மதிப்பிலான ஆவணங்கள்?எத்தனை வருட ஆவணங்கள்?எவ்வளவு மனித உழைப்பு?
என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.கடைசி வரை தீவிபத்து எப்படி நடந்தது என்பதை எந்த ஏடுகளிலும் தெரிவிக்காத அதிகாரிகளா உண்மை நிலையைச் சொல்லப் போகிறார்கள்?.
காவல் நிலையங்கள்,பத்திரப்பதிவு அலுவலகங்கள்,மின்வாரிய அலுவலகங்கள்,இன்னும் மாவட்டம் தோறும் பல்வேறு துறை சார்ந்து இயங்கி வருகின்ற,எல்லா அரசுக்கட்டிடங்களுக்குமே இதே நிலைமை வேறு எந்த மாநிலத்திலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
'பிளான் அப்ரூவலு'க்கு ச்செல்லும் கட்டுநர்களையும்,ரங்கநாதன் தெரு போன்ற நெரிசலான தெருக்களில் உள்ள கட்டிடங்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளைச் சொல்லும் சி.எம்.டி.ஏ.மற்றும் டி.டி.சி.பி.போன்ற
அரசுக் கேந்திரங்கள்,இது போன்ற அரசு கட்டிடங்களை எப்போதாவது ஆய்வு செய்திருக்கிறதா?
தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது?விடுமுறை நாட்களில் கட்டிடப் பாதுகாப்பினை எவ்வாறு மேற்கொள்வது என்பவை பற்றி யோசித்திருக்கிறதா?என்பது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி.
தனியார் கட்டிடங்களில் பாதுகாப்பு விதிகளை வரையறுக்கும் அரசு,அரசுக் கட்டிடங்களுக்கும் அவை
பின்பற்றப்படச் செய்ய வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.
பொங்கல் திருநாளில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர் திரு.அன்பழகன் அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:37
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வசூல் வேட்டை-ஜனவரி-2012
2012 ல் கட்டுமானத்துறை எப்படி இருக்கும்? என்று யோசித்தால்,
ஆச்சரியக்குறிகளைவிட,கேள்விக்குறிகளே அதிகம் நம் முன் வந்து நிற்கின்றன.
வழக்கமாக கட்டுமானத்துறையில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம்,
தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய இவைதான் பெரும் பிரச்சனைகளாக இருக்கும்.
ஆனால்,வெளியே சொல்லப்படாத, கட்டுமானத்துறையின் கழுத்தை நெரிக்கும்
ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று இருக்கிறது.
அதுதான்'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'அதாவது ஒவ்வொரு சதுர அடிக்கும் இவ்வளவு என கணக்கிட்டு,அரசியல்வாதிகள் கையூட்டாகப் பெறுவதுதான்
'ஸ்கொயர் ஃபீட்' கட்டிங்'.
இது எந்த அரசு விதிகளுக்கும்,அரசு ஆவணங்களுக்கும் அகப்படாதது.மிகமுக்கியமாக அரசின் கஜானாவிற்கு சென்று சேராதது.
கட்டிடங்களில் சாதாரண கட்டிடம்,சிறப்புக்கட்டிடம்,(SB) பன்னடுக்கு வளாகக் கட்டிடம்(MSB)
என மூன்று வகை உண்டு.இவற்றில் பெரும்பாலும் நமது கட்டுநர்கள் கட்டுவது,
சிறப்புக் கட்டிடம்,பன்னடுக்கு வளாகக் கட்டிடம் ஆகியவைதான்.
சென்ற அரசுக் காலத்தில்,சாதாரண கட்டிடம்,சிறப்புக் கட்டிடம் ஆகியவற்றிற்கு எந்த வித
கையூட்டும் பெறப்படவில்லை.ஆனால்,பன்னடுக்கு வளாகக் கட்டிடத்திற்கு
மட்டும் சதுர அடிக்கு ரூ.10 என,விலை நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டு வந்தது.
வேறு வழியில்லாத கட்டுநர்களும்,அதை கஷ்டப்பட்டு செலுத்தி காலத்தைக் கடத்தினர்.
காலம் மாறியது,2011 தேர்தல் வந்தது.ஆட்சியும் மாறியது.இனி.அந்த 'கட்டிங்' செலுத்த தேவையிருக்காது என்று மகிழ்ந்திருந்த கட்டுநர்களுக்கு,பேரிடி இறங்கியது.
சிறப்புக் கட்டிட வகை சதுர அடிக்கு.ரூ.50,பன்னடுக்கு வளாகக் கட்டிட வகை ரூ.100 செலுத்த வேண்டுமென கட்டாய வசூல் வேட்டை நடந்து வருகிறது.
கட்டுமான அனுமதி அளிக்கும் அரசு கேந்திரங்களை,கைக்குள் வைத்துக்கொண்டு நடைபெறும் இந்த வசூல் வேட்டையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கட்டுமானத்துறையே சிக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த'கட்டிங் ஃபீஸ்'கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக
பில்டர்கள் குமுறுகிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள் மூலமாக நடைபெறும் இந்த வசூல் வேட்டைக்கு ஒத்துவராத கட்டுநர்களின் புராஜெக்டுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.புராஜெக்டுகள் நிறுத்தப்பட்ட செய்தி வெளியே கசிந்தால்,வீடுகள் விற்பனை ஆகாது,புக்கிங் ஆன வீடுகளும் கேன்சல் ஆகிவிடுமே என்று எண்ணி,நமது கட்டுநர்கள் வேறு வழியின்றி இந்த அநியாய கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
சதுர அடிக்கு ரூ.50,ரூ.100 என இவர்களுக்கு கட்டிங் கொடுத்துவிட்டு,இந்த தொகையை சரிகட்ட,கடைசியாக விற்பனை விலையை உயர்த்த வேண்டி இருப்பதாக பரிதாபத்தோடு புலம்புகின்றனர் பில்டர்கள்.இதனால்,சதுர அடி விலையுயர்வு எக்கச்சக்கமாக எகிறி,நடுத்தர மக்களின் நீண்ட நாள் ஆசையை வெறும் பகற்கனவாக்கி விடுகின்றன.
ஒரு நாட்டின் தோற்றத்தையே மாற்றிக் காட்டும் கட்டுநர்களை நெருக்கும்,இந்த அநியாய வசூல் வேட்டையை உடனே நிறுத்தச்செய்து,நாட்டின் முதன்மை துறையான கட்டுமானத்துறைக்கு,இந்த அரசு உதவிட வேண்டும் என்பது கட்டுநர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல,
பொது மக்களின் எண்ணமும் கூட.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:36
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மழையின் உத்தரவு!டிசம்பர்-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:35
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நல்லாட்சியைத் தருமா உள்ளாட்சிகள்?அக்டோபர்-2011
மக்களுடன் நேரடித்தொடர்பு என்ற வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் உண்டு.மாநகரங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதி,குடிநீர்,கழிவுநீர்,தெரு விளக்கு,சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றை திறம்பட செயல்படுத்துவதற்காகத்தான் இந்த உள்ளாட்சி அமைப்புகள்.
ஆனால்,தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் துவங்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவற்றை எல்லாம் முழுமையாக நாம் பெற்றிருக்கிறோமா?அவ்வளவு ஏன் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் நடைபெறும் கூட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தன என்கிற செய்தியையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ?அமர்வதற்காக போடப்பட்ட நாற்காலிகள் வலமும் இடமும்,மேலும் கீழுமாக யார் மேலேயாவது வீசப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.செருப்புகளும்,மைக்குகளும் கூட எப்போது யார் மீது வீசப்படுமோ என்ற பயம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தங்களுடைய உரிமை பிரச்சனையை நிலை நாட்டுவதற்காகவோ,தங்கள் சொந்தப்பிரச்சனைகளை பேசி
பெரிதாக்குவதற்காகவோதான் பெரும்பாலும் உள்ளாட்சியமைப்புக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றிற்கிடையே,மக்களின் வாழ்வாதரங்களை மேம்படுத்தும் நல நோக்கத்துடன் நடத்தப்படும் உண்மையான உள்ளாட்சிக் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.ஆனால் நாம் பேசுவது பெரும்பான்மை கூட்டங்கள் பற்றி.
மக்கள் தொகையும்,போக்குவரத்தும் பெருகிப்போன இக்காலகட்டத்தில் மற்றுமொரு உள்ளாட்சி தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம்,இச்சூழ்நிலையில் உள்ளாட்சி அமைபுகளின் ஆட்சி செயல்பாடுகளில் அவசியம் வரவேண்டிய மாற்றங்களாக மக்கள் எதிர்பார்ப்பவை ஏராளம் இருக்கின்றன அவற்றில் சில:
சாதாரண தூறல் மழைக்கே அடைத்துக்கொள்ளும் கழிவுநீர் வடிகால்களின் நிலைமை மாற வேண்டும்.சாலையோரங்கள் சுத்தம் செய்யப்படாமலே ப்ளீச்சிங் பவுடரை மட்டும் தூவிவிட்டு போகிற பொறுப்பற்ற செயல்கள் மாறவேண்டும்.பச்சிளம் குழந்தைகள் பிறக்கும் மகப்பேறு மருத்துவ மனைகள் நம் மாநிலத்தில் பெரும்பாலும் குப்பைக் கூடங்களாக காட்சியளிக்கும் சீர்கேடுகள் மாற வேண்டும்.திருட்டுக்கு உதவும் எரியாத தெருவிளக்குகள் சரி செய்யப்படவேண்டும்.
போக்குவரத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் காலை பத்துமணிக்கு மேல் குப்பைகளையும்,கழிவுகளையும் அகற்றும் மெத்தன ஊழியர்களும்,பொறுப்பற்ற அதிகாரிகளும் மாற வேண்டும்,போக்குவரத்திற்கு உதவும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள்
அகலமாக்கப்படவேண்டும்.
இவை எல்லாம் மாறினால் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலுக்கும் ஒரு உண்மையான அர்த்தம் இருக்கும்.இல்லையெனில்,பொதுத்தேர்தலில் எம்.எல்.ஏ, சீட்டு கேட்டு கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் இன்னொரு வாய்ப்பு என்ற அளவிலேயே உள்ளாட்சி பதவிகள் அமைந்து விடக்கூடும்.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:32
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அசராத அன்னா ஹசாரே!செப்டம்பர்-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:31
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நில முழுங்கிகள்-ஆகஸ்ட்-2011
குலசேகர பாண்டியனின் சமஸ்தானத்தில் நடந்த ஒரு சம்பவம்.அண்டை நாட்டு மன்னர்களை பின்னிப் பெடெலெடுத்ததில்,மகிழ்ந்து போன பாண்டியன் தனது படை வீரர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினான்.
அதில் ஒரே ஒரு வீரன் மட்டும்,'நகையும் வேண்டாம்,பணமும் வேண்டாம் நிலமாக கொடுங்கள் என்றான்.
அதற்கு அரசன்,'எத்தனை காணி நிலம் வேண்டும்?'எனக் கேட்க 'கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலுள்ள நிலத்தை பரிசாக தரும்படி'கேட்டான் வீரன்.
அவனது பேராசையை புரிந்து கொண்ட மன்னன்,'குத்துமதிப்பாக சொன்னால் எப்படி?உனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ,அது வரைக்கும் ஓடிச்சென்று நமது கொடியை நட்டு விட்டு திரும்பி வா!
அத்தனை நிலமும் உனக்கே சொந்தம்'என்றான்.
வீரன் ஓடினான்..ஓடினான்..பல காணி நிலங்களைக் கடந்தான்,யார் யாருக்கெல்லாம் சொந்தமானதோ
அந்த நிலங்களின் மீதெல்லாம் ஓடினான்,ஆறு,மலைகளை கடந்தான்,'இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே!
இன்னும் கொஞ்சதூரம் ஓடுவோமே!' என்று ஓடியதில் மன்னனின் எல்லைகளையும் தாண்டி விட்டான்.
ஏற்கனவே தோற்றுப் போன கடுப்பில் இருந்த எதிரி நாட்டு வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டான் பாண்டிய வீரன்.தனியாக மாட்டிய பாண்டிய தேசத்து வீரனை,அவனது கொடியை வைத்து அடையாளம் கண்டு
நையப்புடைத்துக் கொன்றனர்.
நிலப்பேராசைக் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் இக்கதையை ஒரு பாடமாக சொல்லலாம்.'
எவ்வளவுதான் எண்ணெய் பூசி நிலத்தில் புரண்டாலும்,ஓட்டுகிற மண்தான் ஒட்டும்'என்கிற சாதாரண தத்துவம் கூட ஏனோ மனிதர்களுக்குப் புரிவதில்லை!
தனக்கு பின் வருகிற எல்லா தலைமுறைகளுக்கும்,எந்த வழியிலாவது சொத்துக்களை சேர்த்து விடத் துடிக்கிறார்கள்.ஆசைகள் பெருகவே,குற்றங்களும் பெருகிவிட்டன.
சாதாரண குப்பன்,சுப்பன் என்கிற அளவில் நடைபெற்று வந்த நில மோசடிகள் இப்போது வி.ஐ.பி க்கள்
வரை வெகு தாராளமாக நடந்தேறி வருகின்றன.2006-11 காலக்கட்டத்தில்(மட்டும்)நடைபெற்ற
நில மோசடிக் குற்றங்களை விசாரிக்க,தனிப்பிரிவு அமைக்கப்பட்ட இரண்டே வாரங்களில் 1449 புகார்கள் பதிவாகி இருக்கின்றன என்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரம் மற்றும் உரிய ஆவணங்கள் இருந்தும் நிலங்களை நிறைய அப்பாவிகள் பறிகொடுத்திருக்கிறார்கள்.போலிப் பட்டாவைப் பெற்றுக்கொண்டு,பணத்தினை இழந்திருக்கிறார்கள்,ஒரே நிலம்,பல பேருக்கு விற்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
சில காவல்துறை அதிகாரிகள்,சில பத்திரப் பதிவு அதிகாரிகள் ஆசியுடன் அரசியல் ரௌடிகள் மட்டுமல்ல,அமைச்சர்களும்,நிலக்கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திகைத்துப்
போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.
ஜனநாயகத்தின் மீதும்,அரசின் மீதும்,நம்பிக்கை உடைய அப்பாவிகளின் உடைமைகளையும்,சொத்துக்களையும் காப்பதற்கு தான் சட்டம்,அதிகாரிகள்,காவல்துறை போன்றவை இருக்கிறது என இதுவரை நாம் நினைத்தது தவறு போலிருக்கிறது.
நிலப் பேராசை கொண்ட பாண்டிய நாட்டு வீரன் போல அடுத்தவர் நிலம் மீதெல்லாம் ஓடி அபகரிக்கும்
நில முழுங்கிகளின் விவரம் தற்போது வெளிவர துவங்கி இருக்கிறது.இவர்கள் அத்தனை பேரும்,சற்றும் தாமதிக்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இவர்களை தண்டிக்க இந்த அரசு வெகுகாலம்
எடுத்துக் கொள்ள கூடாது .ஏனெனில் 'தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்'.
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:31
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பர்ஸ் வேட்டை-ஜூலை-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:30
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அண்ணன் போட்ட சட்டை! ஜூன்-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:29
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
யாருடைய வசதிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி!-மே-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:28
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஐந்து நிமிடம் ஒதுக்குங்களேன் -ஏப்ரல்-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:27
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஹாரி பாட்டரும் ஆற்று மணலும்-மார்ச்-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:26
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இவர்களை பாருங்கள்!இவர்களையும் பாருங்கள்!-பிப்ரவரி-2011
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:25
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எங்கே அந்த பூகோளம் தெரியாதவர்?-ஜனவரி-2011
1963.அந்த முதலமைச்சர் கொஞ்சம் பாமரத்தனமானவர்,படிக்காதவர்.பொதுக்கூட்டங்களில் அவரை எதிர்த்துப் பேசும் எதிர்கட்சிகள் அன்றாடம் இந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டுதான் போரிடும்.
பூகோளம் தெரியுமா உனக்கு?எனக் கேட்டு கெக்கலிப்பார்கள் ஆனால்,அவர் மட்டும்தான் நாட்டில் உள்ள மொத்த ஆறுகள்,ஏரிகள்,அணைக்கட்டுக்களை அறிந்து வைத்திருந்தார்,கணக்கு தெரியுமா?என்பார்கள்.நாட்டின் வேலையற்ற தொழில் வளங்களையும் பற்றிய கணக்கு விவரங்கள் அவருக்கு அத்துப்படி.
அறிவியல் தெரியாதா அவரால் தான் 150 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாயின.
ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அனுமானித்து அகற்ற அந்த தொழில் மேதையால் மட்டுமே முடிந்தது.
அந்த எதிர்கட்சிகளின் பெயர்கள் நமக்கு தேவையற்ற ஒன்று ஆனால்,அந்த முதலமைச்சரின் பெயர் காமராஜர்.
காட்சி மாறுகிறது -2011
டாஸ்மாக் வருமானங்கள்,இலவச திட்டங்கள்,வேண்டாமென மறுத்தாலும் புறங்கையில் ஆயிரம் ரூபாய் தாளை சொருகி விட்டுச் செல்லும் பாசக்கார கட்சிகள், நிதிப்பற்றாக்குறை ஆகும்போதெல்லாம் புதிய வரியை உருவாக்கும் நிர்வாகங்கள்.தலைபோகிற பிரச்சனைகளின்போதும் தலையசைத்து கேட்க விழையாத மெத்தன அரசுகள்.
2010-ன் இறுதியில் ஒட்டுமொத்த கட்டுமானத்துறையை கலங்கடித்த,கலங்கடித்துக் கொண்டிருக்கும்
கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தப்போவதாக யாதொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த வெங்காய விலை உயர்வின் தகுதி கூட கட்டுமானத் துறைக்கு இல்லை போலிருக்கிறது.
பிரசானியா வரும் வரை அதைப்பற்றி சற்றும் யோசிக்காமல் இருப்பது,அது வந்த பிறகு ஒரே அடியாக துள்ளி குதிப்பது இதுதான் நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம்.குறைந்த பட்சம் அந்த பழக்கம் கூட கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதில் எவருமே அரசு இதுவரை கடைப்பிடிக்கவில்லை.
1963-டன் ஒப்பிடும் போதும் தற்போது மேம்பட்ட தொழில் நுட்பம்,அதிநவீன அரசு துறைகள்,அதிகாரிகள் இன்னும் பல இவற்றிற்கு நடுவில் அனைத்துத் துறைகளையும் கரைத்து குடித்த ஒரு தலைவர்.காண்பதற்கும்,கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் தொழில்கள் வாழ்வதற்கு?
பூகோளம் தெரியாத,அறிவியல் அறியாத,கணக்கு தெரியாத பாமரத்தனமான அந்த முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?
நாம் கேட்கவில்லை.நாடு கேட்கிறது!
E.உதயகுமார்
நிர்வாக ஆசிரியர்
Posted by
பில்டர்ஸ் லைன் கட்டுமானத்துறை மாத இதழ்
at
02:11
0
comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Comments (Atom)